தொழுதூரில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏழை எளிய ஆதரவற்ற குடும்பத்தினருக்கு நிவாரணம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் ஊராட்சியில் ஏழை எளிய ஆதரவற்ற குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதார பணிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. அரசு பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும் ஆங்காங்கு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தங்களால் இயன்ற உதவிகளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குடும்பத்தினருக்கு செய்து வருகின்றனர்.  இதனடிப்படையில் திட்டக்குடி அடுத்த தொழுதூர் ஊராட்சியில் ஆதரவற்ற ஏழை எளிய குடும்பத்தினருக்கு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்விற்கு மா.பொடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கரன் தலைமை வகித்தார் .மேனாள் வட்டத்துணைத்தலைவர் அர்ச்சுனன்,ஒன்றிய துணை செயலாளர் கமலக்கண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி,ஊராட்சி செயலர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி , ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளையும், 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கி, சமூக பாதுகாப்புடன் தனிநபர் இடைவெளிவிட்டு, பாதுகாப்புடன் இருக்க கேட்டுக்கொண்டனர்.

 

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கந்தசாமி, ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முதுகலை ஆசிரியர்கள் கலைமணி,நீலகண்டன் மற்றும் தாய்மண் காசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.