கொரோனாவை காலி பண்ணியாச்சு.. பச்சை மண்டலமானது ஈரோடு மாவட்டம்

 மார்ச் மாத இறுதியிலேயே ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பில் முன்னணி வரிசையில் இருந்தது. அங்கு இறுதி வரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 


இதனால் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சிவப்பு மண்டல பகுதியாக ஈரோடு மாவட்டம் இருந்தது.



வெளிநாட்டுக்காரர்கள் அதிக இடங்களுக்கு சென்று வந்ததால், ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.


மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அத்தணை துறைகளும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். 



கட்டுப்பாட்டு பகுதிகளை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து, 1 லட்சத்து 66 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணித்தனர். இதையடுத்து, கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


சமூக இடைவெளி பின்பற்றுதல், செக் போஸ்ட்களில் கண்காணிப்பு, கிருமி நீக்கம் என அத்தணை நோய்த்தடுப்பு பணிகளையும் முன்னோடியாக செய்தனர் ஈரோடு மாவட்டத்தினர். 


இந்த செயல்பாடுகளால் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக தொற்று ஏற்ப்படவில்லை. 


மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் குணமாகி வீடு திரும்பினர்: ஒருவர் இறந்து விட்டார். 


இருந்தபோதிலும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு புதிய தொற்று இல்லாத நிலை உருவாக்கப்பட்டது.


தற்போது வரை 21 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை. இதன்மூலம் கொரோனா நிலவர பட்டியலில் ஈரோடு பச்சை மண்டலப் பகுதியாக மாறி உள்ளது. 


கிருஷ்ணகிரிக்கு அடுத்தபடியாக பச்சை பட்டியலில் வரும் மாவட்டம் ஈரோடு தான்.


பல கஷ்டங்களுக்கு இடையில் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோட்டை உருவாக்கிய ஈரோடு கலெக்டர், போலீஸ் எஸ்.பி., மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என அரசுத்துறையினருக்கு ஈரோடு மாவட்ட மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இருந்த போதிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


 


 


 


Previous Post Next Post