பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சத்து மாத்திரை மற்றும் நிவாரண பொருட்கள்; அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சத்து மாத்திரை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் கலந்து கொண்டு வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

மாற்றுத்திறனாளிகள் 40, பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, பாக்கெட் உப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், புளி ஒரு பாக்கெட். மிளகாய் ஒரு பாக்கெட், முதலானவைகள் வழங்கப்பட்டது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

மேலும் இந்நிகழ்ச்சியில்  மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், நகராட்சி ஆணையர் பாரிஜான், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், முன்னாள் கவுன்சிலர்கள் சீனிவாசன், முத்துசாமி ராஜேந்திரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த சீனிவாசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.