எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாளையொட்டி ச.ம.க. கொரோனா நிவாரண உதவி: மாவட்ட செயலாளர் எம்.கே.டி. கோவிந்தசாமி வழங்கினார்

சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர், முன்னாள் எம்.எல் ஏ.எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பெருந்துறை வட்டம் குள்ளம்பாளையம் ஊராட்சி மேட்டுப்பாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் அர்ஜுனன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் எம்.கே.டி. கோவிந்தசாமி  அரிசி மற்றும் அத்தியவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார், இந்நிகழ்ச்சியில் ஜெயராமன். சுப்பிரமணி. தெய்வசிகாமணி,வார்டு உறுப்பினர் செல்வராஜ், கிருஷ்ணன், ரத்தினசாமி, வெங்கடாசலம், குணசேகரன், முத்துச்சாமி, எம்.ஆர். எல்.மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்