கிணத்துக்கடவு வட்டம் பெரியார் நகரில் பொது மக்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள்; கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் வி.கண்ணம்மாள் தேவராஜன் வழங்கினார் தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அறிவுறுத்தலின்படி கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி கிணத்துக்கடவு வட்டம் பெரியார் நகரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் வி.கண்ணம்மாள் தேவராஜன் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.