கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி திட்டக்குடி பகுதிகளுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்கு வந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

 

இதனையடுத்து அவர்களுடைய சொந்த கிராமங்களில் அதிகாரிகள் தடுப்பு அமைத்து முழுவீச்சில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார் பின்  கழுதூர், தொண்டாங்குறிச்சி,தொழுதூர் ஆகிய பகுதிகளில்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

இதில் சார் ஆட்சியர் பிரவின்குமார், தாசில்தார் செந்தில்வேல், ரவிச்சந்திரன், காவல்துணைகண்காணிப்பாளர் வெங்கடேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர்  உதவிஆய்வாளர் சக்தி கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி,பச்சையப்பன் செயலர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post