பணகுடி, வடக்கன்குளம், திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கார்டியோ மானிட்டர் கருவிகள்... இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சத்தை ராதாபுரம் தொகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான நவீன மருத்துவ கருவிகளை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்திருந்தார்.


 வடக்கன்குளம், பணகுடி, திசையன்விளை ஆகிய 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தற்போது கார்டியோ  மானிட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.


 இன்று  வடக்கன்குளம் மற்றும் பணகுடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கார்டியோ மானிடர்களை மக்கள் பயன்பாட்டிற்காக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இயக்கி தொடங்கி வைத்தார்.


ஏற்கனவே ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வள்ளியூர், ராதாபுரம், கூடங்குளம் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தம் 26 கார்டியோ மானிட்டர் கருவிகள் கடந்த வாரத்தில் இன்பதுரை எம்எல்ஏ வால் வழங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பணகுடி வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று நடைபெற்ற கார்டியோ மானிடர்களை இயக்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ராதாபுரம் வட்டார சுகாதார அதிகாரி டாக்டர் கோலப்பன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.