கழுதூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. கணேசன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது

கழுதூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. கணேசன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்களை  சார் ஆட்சியர் பிரவீன்குமார் வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திட்டக்குடி பகுதியில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்  பொது மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென திமுக  தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார் அதன்பேரில்  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள கழுதூர் கிராமத்தில்  கடலூர் மேற்கு மாவட்ட திமுக  செயலாளரும்  திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ, கணேசன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார்  கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை  வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

அதைத்தொடர்ந்து ஊராட்சிமன்ற தலைவர் கருணாநிதி முன்னிலையில் எம்.எல்.ஏ கணேசன் ஏற்பாட்டில் ராட்சத இயந்திம் மூலம் கிராமப்பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி பகுதிகள் முழுவதும்  தூய்மையாக உள்ளதாக  சார் ஆட்சியர்   ஊராட்சிமன்ற தலைவரை பாராட்டினார். இதில் திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர், வி.ஏ.ஒ சுகுந்தன். திமுக ஒன்றிய செயலாளரும்  கவுன்சிலருமான பட்டூர் அமிர்தலிங்கம், அரசு  சித்தமருத்துவர் செல்லையா , ஊராட்சி துணைதலைவர் ஆகாசதுரை, செயலர் தேவேந்திரன்  மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம முக்கியஸ்தர்கள், ஊர்பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர்.