நெல்லை பேட்டையில் தொழு நோயாளிகள் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்

நெல்லை பேட்டையில் தொழு நோயாளிகள் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் சுதா பரமசிவன்-பரணி சங்கரலிங்கம் வழங்கினர்

 


 

நெல்லை பேட்டை சத்யா நகரில் உள்ள 100 தொழு நோயாளிகள் குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும் மாவட்ட ஆவின் சேர்மனுமான  சுதா பரமசிவன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் ஆகியோர்  தொழுநோயாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பைகளை வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் பகுதி செயலாளர் சந்திரசேகர், பிச்சி குட்டி, அவைத் தலைவர் பூக்கடை நல்லகண்ணு, பகுதி துணைச் செயலாளர் முத்துபாண்டி,  வட்ட கழக செயலாளர்கள் வைராஜ், ராமலிங்கம்,  ஆண்டி, தங்கவேல், முத்துராஜ்,  நிர்வாகிகள் முருகன் சேது, சங்கர்,  தச்சை பாலு, எம்ஜிஆர் இளைஞரணி நல்லபெருமாள்,  ஆட்டோ குமார், பட்டாசு பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.