பழனி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

பழனி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பழனி நகராட்சி அலுவலக வளாகத்தில், அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி, மளிகைபொருள், காய்கனி, ஆகியவை வழங்கப்பட்டது ஆணையாளர் லெட்சுமணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கௌரவத் தலைவர் கந்த விலாஸ் உரிமையாளருமான செல்வகுமார் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார் அருகே வட்டாட்சியர் பழனிச்சாமி, பழனி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், நகராட்சிப் பொறியாளர் சண்முகம்,பழனி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஹக்கீம் ராஜா காந்தி மார்க்கெட் தலைவர் வெங்கடாசலம், கருணாநிதி, காய்கனி சங்கத்தலைவர் திருச்செல்வம், மற்றும் அனைத்து அதிகாரிகளும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.