திசையன்விளை அரசுமருத்துவமனைக்கு கார்டியோ மானிட்டர் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ கருவிகள்; எம்.எல்.ஏ இன்பதுரை வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திசையன்விளை அரசுமருத்துவமனைக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  வாங்கப்பட்ட கார்டியோ மானிட்டர் உள்ளிட்ட அதி நவீன மருத்துவ கருவிகளை எம்.எல்.ஏ இன்பதுரை வழங்கினார். அவைகளை மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கிவைத்தார். அருகில் அதிமுக ஒன்றியச் செயலாளர் அந்தோணி அமலராஜா மற்றும் வழக்கறிஞர் பழனி சங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.