தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி மாடு உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துர் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (65) என்பவர் தனது ஊரைச் சுற்றியுள்ள வயல் வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, வயல் வழியாக மிகத்தாழ்வாக டிரான்ஸ்பாரத்திற்கு சென்ற மெயின் லைன் மின் கம்பி மீது மாடு உரசியதில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிரிழந்தது.

 

தொடர்ந்து மின் விபத்துகளால் வேறு உயிர்கள் பலியாவதற்கு முன் தாழ்வாக செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்டவும், பழுதான மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்