பரதராமியில் மாவட்ட மன்டல லயன்ஸ் தலைவர் வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டில் கபாசுர குடிநீர்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொரானா வைரஸ் பாதிக்காமல் தடுக்க பரதராமியில் மாவட்ட மன்டல லயன்ஸ் தலைவர் வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டில் கபாசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

 

பாரதி சேவா  சங்கம் ஆர்எஸ்எஸ் மூலமாக பரதராமி ஒட்டியுள்ள வீரசெட்டிபல்லி, பரதராமி வி.மோடிகுப்பம், அரிகவாரிப்பள்ளி,  சாமி ரெட்டி பள்ளி, விழுந்தோன்பாளையம் உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட பகுதிகளுக்கு லயன்ஸ் மன்டலதலைவர் மூலம் காய்ச்சி வழங்கிய கபசுர குடிநீரை குடியாத்தம் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரலயன்ஸ்சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் குமார் பொருளாளர் கமல்ஹாசன், முன்னாள் மாவட்டதலைவர் காசிவிஸ்வநாதன், வட்டாரத் தலைவர் எம் கே பொன்னம்பலம், முன்னாள் வட்டார தலைவர் சுரேஷ்குமார், கலிமுல்லா தில்லைநாதன், கோல்டன்பாபு, ஆர்எஸ்எஸ் பொருப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.