திருப்பூரில் உலக தலசீமியா தின ரத்ததான முகாம்: சு.குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

தலசீமியா நோயினால் பாதிப்பு அதிகமானவர்களுக்கு, ரத்த அணுக்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. இதில் இரண்டாம் நிலை பாதிப்பு ஏற்ப்பட்ட்டவர்கள் தேவைப்படும்போதும், மூன்றாம் நிலை பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மாதம் ஒருமுறையும் ரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டியது இருக்கிறது.


திருப்பூர் மாவட்டத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 142 பேர் இருக்கிறார்கள்.  


எனவே தலசீமியா பாதிப்பு உள்ளவர்களுக்கென அடிக்கடி ரத்ததான முகாம்கள் நடக்கிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சக்சம் அமைப்பு, சேவாபாரதி மற்றும் முயற்சி அமைப்பு இணைந்து நடத்திய ரத்ததான முகாம் திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த முகாமினை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். இதில் சேவாபாரதி ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், சக்சம் அமைப்பு நிர்வாக்கிகள் ரத்தினசாமி, தமிழ்செல்வன், முயற்சி அமைப்பு நிர்வாகிகள் சிதம்பரம், பரமசிவம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ்  உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் 50க்கும் மேற்ப்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர்.



Previous Post Next Post