வேப்பூர் அருகே நான்கு மயில்கள் பலி; விஷம் வைத்த விவசாயி கைது
வேப்பூர் அருகே மங்களூரில் நான்கு மயில்கள் இறந்தது அதற்கு விஷம் வைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

 


 

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா மங்களுர்கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் அய்யப்பன் (வயது 45), விவசாயியான இவர் தனது நிலத்தில் கோடை பயிராக எள்ளு விரைத்துள்ளார் எள் பயிரும் தற்போது வளர்ந்து பூ வைத்துள்ள நிலையில் உள்ளது.  

 

எள்ளு செடிகளை எலிகள் ஆங்காங்கே வெட்டி தின்பதால் மனமுடைந்த விவசாயி எலிகளை அழிக்க எலி பேஸ்ட கலந்து ஆங்காங்கே வைத்துள்ளார்

 

நேற்று காலை அவரது நிலத்திற்கு தேசிய பறவையான மயில்கள் நான்கு வந்து எள் பூக்களை தின்றுள்ளது அதை தின்றவுடன் நான்கு மயில்களும் மயங்கி விழுந்து இறந்துள்ளன. இதை கண்ட அப்பகுதியினர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்  

 

விருத்தாசலம் வனத்துறை அலுவலர் ரவி தலைமையில் வனவர் மணியரசன், வனகாப்பாளர் சங்கர், வனகாவலர் சிவானந்தம் ஆகியோர் சம்மந்தப்பட்ட கொளஞ்சியின் நிலத்திற்கு சென்று நான்கு மயில்களையும் கைப்பற்றி, மயில்களுக்கு விஷம் வைத்த விவசாயி அய்யப்பனை கைது செய்தனர்,  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது