பழனி அருகே இலங்கை தமிழர்கள் முகாமிற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இலவச நலத்திட்ட உதவிகள்
பழனி அருகே இலங்கை தமிழர்கள் முகாமிற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

 


 

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அனைத்து இலங்கை தமிழர் முகாமில் கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றன அதன் ஒரு பகுதியாக பழனி திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் 100 குடும்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கொரோனோ வைரஸ் எதிரொலியாக வேலைக்கு செல்லாமல் அங்குள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் உணவுக்காக மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையை அறிந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து சூலூர், பல்லடம்,திருப்பூர், ஆகிய ஊர்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைத்து முகாமில் இருக்கக்கூடிய 100 குடும்பங்களுக்கு 1.25 லட்சம் மதிப்பீட்டில் இலவச அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் வகைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

 


 

இந்நிகழ்வின் தலைமையாக மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலையாக கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் பழனி நகரச் செயலாளர் சிவபாலன் ஒன்றிய செயலாளர் காஜா மற்றும் கட்சிப் பொறுப்பாளர்களான வேலுச்சாமி, ரத்தினா மனோகர், அருள்முருகன், தங்கராஜ், மணிகண்டன், போஸ், ராஜேஸ்வரன், மோகன்குமார், மாரிமுத்து, ராமகிருஷ்ணன், அப்துல் காதர், ஆகியோர் கலந்து கொண்டு அங்கு உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.

 

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமானை புகழும் வண்ணம் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். பொருட்களை பெற்றுக் கொண்ட முகாம் மக்கள் கட்சி தொண்டர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

கொரோனோ வைரஸ்சை தடுக்கும் விதமாக இவ்விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நடைபெற்றது.