நத்தம் அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து ஆய்வாளர்; குவியும் பாராட்டுக்கள்நத்தம் அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து ஆய்வாளர் குவியும் பாராட்டு 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதியில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது துவரங்குறிச்சி  கிடாரிப்பட்டி சேர்ந்த  ஜெயராமன்,சிவராமன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மங்களாம்பட்டி அருகே வரும்போது பனைமரத்தில் மோதி விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக கிடந்தனர்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

அப்போது  அங்கு வந்த நத்தம்  காவல் ஆய்வாளர் ராஜமுரளி அவர்கள் உடனடியாக  தனது வாகனத்தில்  ஏற்றி  செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சிகிச்சைக்காக சேர்த்தார். கொரோனா பாதுகாப்பு பணி, டாஸ்மார்க் கடைகள் திறந்த பின்பு கடும்  பணிச் சுமைகளுக்கிடையே காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.