பத்திரிகையாளர்களுக்கு சேவாபாரதியின் சார்பில் ஹோமியோபதி பரிசோதனை முகாம்

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. அதன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு ஆரோக்கியம் திட்டத்தை உருவாக்கி ஆயுர்வேதா, யோகா நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி  மருத்துவத்தை பரிந்துரை செய்துள்ளது.



திருப்பூர் மாவட்ட சேவாபாரதி அமைப்பானது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கில் சேவைப் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர்கள், அனைத்து அமைப்புகளின் தன்னார்வலர்கள், பொது விநியோகத்திட்ட பணியாளர்கள் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு சேவாபாரதி மருத்துவக்குழுவின் சார்பாக மருத்துவ பரிசோதனை முகாம்களை நாள்தோறும் ஒவ்வொரு பகுதிவாரியாக நடத்தி வருகின்றது.



திருப்பூர் நாளிதழ்களின் நிருபர்கள் - தொலைக்காட்சி, ஊடகத்துறை செய்தியாளர்களுக்கு ஹோமியோபதி மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவர்  கார்த்திக்பாபு தலைமையில், சேவாபாரதியின் மாவட்ட தலைவர்டி.டி.ஆர்.விஜயகுமார்  முன்னிலையில் பரிசோதனைகள் நடைபெற்றது. உடல்வெப்ப அளவு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு,பொது மருத்துவம் செய்யப்பட்டது.



நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுமார் 15 செய்தியாளர்கள் - அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் நோய் எதிர்ப்புசக்தி மருந்துகள் வழங்கப்பட்டன.


Previous Post Next Post