டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து வேப்பூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து வேப்பூரில் திமுக சார்பில்  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்டம்,  நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 

வேப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துகண்ணு,  ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா, ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், சமூக விலகலை கடைபிடித்து தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதேபோல், சிறுநெசலூர் ஊராட்சியில் தி.மு.க. காங்கிரஸ், விடுதலை சிரதுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.