குடிபோதையில் கிணற்றில் இறங்கியவர் நீரில் மூழ்கி பலி

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

கொடுமுடி வட்டம்  வெள்ளோட்டம்பரப்பில் வசிப்பவர் ராக்கியண்ணன் கவுண்டர் மகன் சக்திவேல் வயது 50. இவர் குடிபோதையில் குளிப்பதற்காக வேலப்பம்பாளையம்  பகவதி அம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க இறங்கியுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் கிணற்று நீரில் மூழ்கி  உயிரிழந்து விட்டார். தகவல் அறிந்த மலையம்பாளையம் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனே மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தும், பொதுமக்கள் சேர்ந்து சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.