திருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்

திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது:


திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 


5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.


ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம்.  பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம்.


அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். 



மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் .


தனிக்கடைகள் ஊரக பகுதிகளில் திறக்கலாம். 
அனைவருடைய ஒத்துழைப்பும் கொண்டு சிறப்பாக தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 


மாநகர பகுதிகளில் sample தயாரிக்க கம்பெனிகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். ஷிப்ட் மூலம் ஆட்களை மாற்றி அனைவருக்கும் வேலை கொடுக்கலாம். கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்தான் செய்ய முடியும்.


30 கட்டுப்பாட்டு பகுதிகளில் இரண்டு திறக்கப்பட உள்ளது.


இவ்வாறு கலெக்டர் விஜய் கார்த்திகேயன் கூறினார்.


பேட்டியின்போது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், மாவட்ட போலீஸ் எஸ்பி திஷா மிட்டல், வருவாய் அதிகாரி சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இன்னும் பல்வேறு தொழில்கள் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு அனுமதி பெற கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். யாரிடம்? எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது நாளை தெரியவரும்.


Previous Post Next Post