ஆட்டோ ஓட்டுனர்கள்,மற்றும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான்  பொருட்கள்: திமுக எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா வழங்கினார்

தாம்பரத்தில் தி.மு.க சார்பில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்,சலவை தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான்  பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா வழங்கினார்


சென்னை அடுத்த தாம்பரத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்  ,சலவை தொழிலாளர்கள் ,தற்போது நோய் தொற்று குறித்து அறிந்தும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள்  என 200க்கும் மேற்பட்டோருக்கு    தி.மு.க சார்பில் நகர் துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஒரு வாரத்திற்கு தேவையான 5ந்து கிலோ அரிசி,மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா வழங்கினார் .மேலும் காய்கறிகள் வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும்  500 ரூபாய் வழங்கபட்டது.இதில் ரம்ஜான் பண்டிகைகான பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி ,சேலையும் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்டது. இதனை முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனைவரும் பெற்று சென்றனர்.