திருப்பூர் ரிப்போர்ட்டர் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் ரிப்போர்ட்டர் அசோசியேசனின் முதல் செயற்குழு கூட்டம் பிஎன் ரோடு தமிழன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் திருப்பூர் ரிப்போர்ட்டர்ஸ் அசோஷியேஷன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவராக தமிழன் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சாம் அமிர்தபாபு, செயலாளராக மெகா தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சையத் அலி, பொருளாளராக. மாலை தமிழகம் நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் வி. செல்வநாயகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அதனைத் தொடர்ந்து துணை தலைவர்களாக வசந்த தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் கர்ணன், மூன் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் மன்சூர், துணை செயலாளர்களாகவ்நம் தினமதி நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் வெற்றிசெல்வன், மூன் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தி ஒளிப்பதிவாளர் சதாம் உசேன்,  மேலும் சங்கத்தின் செய்தி தொடர்பாளராக வெளிச்சம் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முகம்மது ஷபீக் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர் தட்சிணாமூர்த்தி, வணக்கம் இந்தியா நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் செந்தில்குமார், தின சூரியன் நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் கார்த்திகேயன், மீடியா செய்தி நாளிதழ் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் தேவேந்திரன், புதிய வெளிச்சம் நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சிக்கந்தர் பாஷா, நம் தினமதி நாளிதழின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் வேதநாயகம், மதிமுகம் தொலைக்காட்சி செய்தியாளர் அசாருதீன், வணக்கம் இந்தியா நாளிதழ் புகைப்படக்கலைஞர் ரவீந்திரன், உள்ளாட்சி சாரல் நாளிதழின் செய்தியாளர் சத்யநாராயணன், தின சூரியன் நாளிதழின் புகைப்பட கலைஞர் மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டனர்.