நத்தம் தொகுதி அதிமுக சார்பாக சலவை தொழிலாளர்களுக்கு இலவச நிவாரணம் பொருட்கள்

நத்தம் தொகுதி அதிமுக சார்பாக சலவை தொழிலாளர்களுக்கு இலவச நிவாரணம் பொருட்கள்- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வழங்கினார்

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அ.தி.மு.க சார்பாக நத்தம் பேருந்து நிலையத்தில்  சலவை தொழிலாளர்கள் 325 பேருக்கு நிவாரணமாக தலா 10 கிலோ அரிசி மற்றும் சீனி, பருப்பு, சோப், டீ தூள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி  தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.இதில் நத்தம் ஒன்றியக் குழு தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சேக்ஒலி ,தொழிலதிபர் R.V. அமர்நாத் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், Ex.கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைப் போலவே நத்தம் தொகுதி அளவில் 900 சலவைத் தொழிலாளர்களுக்கு  நிவாரண பொருட்கள் முன்னாள் அமைச்சர் தலைமையில் வழங்கப்பட உள்ளது.