இந்து அன்னையர் முன்னணி  பொறுப்பாளர்கள் வீடுகளில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு

 

உடன்குடி ஒன்றியம் உடன்குடி வடக்கு பகுதியில் அதிகமான கிராமங்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இந்து முன்னணி  ஒன்றிய பொதுச் செயலாளரும், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளருமான கேசவன் தலைமையில் அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் அவரவர்கள் வீடுகளிலும், அவர்களின் பக்கத்து  வீடுகளிலும் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

 


 

இதில்  பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர் காந்திமதி, ஒன்றிய துணைத் தலைவி சுதா, ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றிய பொருளாளர் பிரம்மசக்தி, கிளை பொறுப்பாளர்கள் ரதிமீனா, சாந்தினி, செல்வமணி, மாசான பேச்சி, வள்ளி, பிரேமலதா, கலைராணி, கல்யாணி, சாரதா,உமா பார்வதி, சக்திகனி, ஜெயலட்சுமி, தங்கேஸ்வரி, வினிதா, மாரியம்மாள் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.