ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண உதவிகள் வழங்கும் இன்பதுரை எம்எல்ஏ

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண உதவிகள் வழங்கும் இன்பதுரை எம்எல்ஏ


ராதாபுரம் தொகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று இன்பதுரை எம்எல்ஏ உணவு தொகுப்பினை முழுவீச்சில் வழங்கிவருகிறார்.


கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ராதாபுரம் தொகுதி முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேரடிப் பார்வையில்  அனைத்து தெருக்களிலும்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.


ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ராதாபுரம் தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அரிசி பைகள் காய்கறி தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று முழுவீச்சில் வழங்கி வருகிறார்.


முதல்கட்டமாக வள்ளியூர் பூங்கா நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் இன்பதுரை எம்எல்ஏ உணவு தொகுப்புகளை வழங்கி நிதி உதவியும் வழங்கினார்.


இதேபோல் ராதாபுரம் தொகுதி முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மஸ்தூர் தொழிலாளர்கள் என சுமார் 1200 பேருக்கு இன்பதுரை எம்எல்ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.


கருங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியகுளம், சங்கனாபுரம், கொக்கேரி மற்றும் ராமன்குடி, நவ்வலடி, இடிந்தகரை, விஜயாபதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அவர்  அரிசி முதலான உணவு தொகுப்பினை  வழங்கினார்.


நேற்று ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரபுரம் பகுதியில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கு இன்பதுரை தலைமையில் அரிசி பைகள் வழங்கப்பட்டது


இன்று காலை உதயத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே 900 பேருக்கு இன்பதுரை எம்எல்ஏ அரிசி பைகள் வழங்கினார். 



அதனை தொடர்ந்து வள்ளியூர் வேன் மற்றும், டாக்ஸி டிரைவர்கள், பாரம் தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 1200 பேருக்கு இன்பதுரை எம்எல்ஏ அரிசி பைகள் வழங்கினார்.  


இஸ்லாமியர்களின் யாத்திரை தலமான ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்து திடீர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்தஊரான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் தவித்து வந்தனர்.  கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்த இந்த குடும்பங்களுக்கு
உணவு அளித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேற்று முன்தினம் இரு வாகனங்கள் மூலம் இரு குடும்பத்தினரையும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக இ-பாஸ் பெற்று தந்து அவர்களது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.


ராதாபுரம் தொகுதியிலுள்ள செட்டிகுளம்,லெவிஞ்சிபுரம் , ஆவரைகுளம்,வள்ளியூர்,கலந்தபனை,கோரியூர்,பொன்னிவாய்க்கால், திசையன்விளை,உறுமன்குளம்,அணைக்கரை இளையநயினார்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே அதிமுகவினர் பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் முதலான உணவுதொகுப்பு பைகளை வழங்கியுள்ளனர்.


இராதாபுரம் தொகுதி முழுவதும் தினந்தோறும் சூறாவளியாக சுழன்று சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மற்றும் அதிமுகவினர் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவருவது ராதாபுரம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Previous Post Next Post