என்.எம்.சி.டி. சேவை நிறுவனத்தின் சார்பில், கொரோனா நிவாரண பொருட்கள்; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார்


என்.எம்.சி.டி. சேவை நிறுவனத்தின் சார்பில், கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் காந்திநகரில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகி  பிரகாஷ், திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்க தலைவர் பங்கஜாசன், ஜெனிதா, ராயல் என்பீல்டு, ஈசர் நிறுவனத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.