வாடகை கார் மற்றும் வேன் உரிமையாளர்கள் கொரோனா நிவாரணம் கோரி கலெக்டரிடம் மனு

விருதுநகரில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் வாடகை கார் மற்றும் வேன் உரிமையாளர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை. 



விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கார்,ஆட்டோ,வேன் என சுமார் 39 ஆயிரம் ஓட்டுனர்கள் உள்ளனர். இதில் ஆட்டோரிக் ஷா ஓட்டுனர்கள் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்து அதன் பயனை அடைந்து வருகின்றனர்.


வாடகை கார்,வேன் ஓட்டுனர்கள் யாருக்கும் அரசிடமிருந்தோ அல்லது பிற அமைப்புகளில் இருந்தோ எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்  ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து  இரண்டு மாதமாக எந்த வாகனமும் இயங்காத சூழ்நிலையில் வருமானம் இழந்து வாடும் நிலையில், இயங்காத வாகனத்திற்கு சாலை வரி இன்சூரன்ஸ் கடன் தவணை தொகை, அதற்கு அபராத வட்டி  ஆகியவற்றை கட்டமுடியாத நிலையில் இருப்பதால்  மேலும் மூன்று மாதம் நீட்டித்து தரவும் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் சுமார் 40க்கும் மேற்பட்ட வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Previous Post Next Post