கோபியில் தி.மு.க சார்பில் ஏழை எளிய  குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள்

கோபியில் தி.மு.க சார்பில் 15வது வார்டில் குடியிருக்கும் ஏழை எளிய  குடும்பங்களுக்கு  அரிசி உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின்  தொடர்ச்சியாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையில் வாடும் மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க,  மாவட்ட செயலாளர்  என்.நல்லசிவம்  வழிகாட்டுதலின்படி,  மாவட்ட இளைஞரணி சார்பில்  அமைப்பாளர் பவானி சேகர் ஆலோசனையின் பேரில், மாவட்ட துணை அமைப்பாளர் செ.கார்த்திகேயன் ஏற்பாட்டில்,ஈரோடு மாவட்டம் கோபி நகரம் 15வது வார்டில் குடியிருக்கும் ஏழை எளிய  குடும்பங்களுக்கு  அரிசி உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை நகர  செயலாளர்  என்.ஆர்.நாகராஜ் வழங்கினார்.உடன் மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.