பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என காயல் அப்பாஸ் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .


கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 21 முதல் மே 17 வரையில் முனாவது கட்டமாக மத்திய, மாநில அரசுகள் உரடங்கு உத்தரவை அமல் படுத்தியது . கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்  தமிழகம் முழுவதும் தற்காலியமாக மது கடைகளை தமிழக அரசு முடியது இதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்றது  . 


 இந்த இரண்டு மாதம் மது  கடைகள் முடியதுனால் மது குடிப்பவர்கள் குடிக்காமல்  அவர்களின் குடும்பத்தில் தகறாறுகள்  இல்லாமல்  பல குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் இந்த நிலையில் மது கடைகளை திறக்க அரசு போட்ட உத்தரவு பல தரப்பு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . 


உரங்கும் உத்தரவுனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வருமானம் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் மது கடைகள் திறப்பதனால் மது குடி பழக்கத்திலிருந்து மீட்டெழுந்தவர்கள் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் பெரும் பாலன குடும்பங்கள் மன நிம்மதியை இழந்து பொருளாதார நெருக்கடியில் இன்னும் கடுமையாக  பாதிக்கபடுவார்கள் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம். 


 தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருவதை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு  கூடுதலாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம் .  


எனவே : மக்கள் நலன் கருதி பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .