ஊரடங்கு உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த  நிறைமாத கர்ப்பிணி பெண்: உதவிக்கரம் நீட்டிய இன்பதுரை எம்.எல்.ஏ

*கொளுத்தும் வெயிலில் கூடார வாழ்க்கை!*


 *ஊரடங்கு உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த  நிறைமாத கர்ப்பிணி பெண்!*


*அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம்!*


*உதவிக்கரம் நீட்டிய இன்பதுரை எம்எல்ஏ* 


 


நெல்லையை அடுத்த கொண்டாநகரம் விலக்கு பகுதியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் சுமார் 30 பேர் அப்பகுதியில் வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்து கிணறு வெட்டும் வேலை செய்து வந்தனர்.


ஊரடங்கு உத்தரவால் அவர்கள் கடந்த ஒரு மாதமாக ஊர் திரும்ப வழியில்லாமல்  உணவுக்கும் தவித்து வந்தநிலை! 
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியது. மேலும் தன்னார்வலர்களும் அவ்வப்போது உதவி செய்து வந்தனர். 


இந்த தொழிலாளர்கள் தங்களுடையசொந்த ஊரான நாமக்கல்லுக்கு திரும்பி செல்ல பல்வேறு  முயற்சிகள் எடுத்து வந்தனர். ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதால் ஊர் திரும்ப வழிவகை இன்றி  தங்களது கூடாரத்தில் தங்கி தவித்து வந்தனர்.


இந்நிலையில்  தொழிலாளர்கள் கூட்டத்தில்   கவிதா என்ற நிறைமாத பெண்ணும் தங்கி இருந்தார்.  


பிரசவத்திற்குள்ளாக கவிதாவை மட்டுமாவது தங்களது சொந்த ஊருக்கு திரும்பி அனுப்பிவைத்து விட வேண்டும் என தொழிலாளர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தனர்.


எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இருந்த அந்த இளம்பெண் கவிதா கொளுத்தும் வெயிலில்  தொழிலாளர்கள் அமைத்த கூடாரத்தில் தங்கிஇருந்தார். பிரசவ நேரத்தில் எனது பெற்றோருடன் இருக்க வேண்டும் எனவே என்னை சொந்த ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் கண்ணீர் மல்க கோரிவந்தார்.


தன்னார்வலர்கள் எடுத்த முயற்சியினால் அந்த கர்ப்பிணி பெண் நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அழைத்து செல்லப்படுவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டது.


 கோவில்பட்டி வரை சென்ற  அவரது வாகனம் சோதனை சாவடியில் முறையான அனுமதி இல்லை என காரணம் காட்டி  நாமக்கல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் அந்த கர்ப்பிணிப் பெண் சென்றவாகனத்தை மீண்டும் கொண்டா நகரத்தில் அவர் தங்கி இருந்த கூடாரத்திற்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.


 இந்தநிலையில் கவிதாவுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்படவே அருகிலுள்ள கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். 


வெளிமாவட்ட தொழிலாளியும், நிறைமாத கர்ப்பிணி பெண்ணுமான கவிதா கொளுத்தும் வெயிலில் கூடாரத்தில் தங்கி சிரமப்படுகிறார். சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். அவருக்கு பிரசவத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. 


கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் கவிதா  பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதை சமூக வலைதளங்களில் மூலம் அறிந்துகொண்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை 
உடனடியாக நெல்லை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குநரை தொடர்புகொண்டு  பேசி கர்ப்பிணி பெண் கவிதாவின் பிரசவத்திற்காக உயர் சிகிச்சை அளிக்க  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.


 இதையடுத்து கல்லூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ குழுவினர்  கவிதாவுக்கு பிரசவம் பார்த்தனர்.


 இன்று மாலை 6 45 மணி அளவில் கவிதாவுக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 


ஊரடங்கு உத்தரவு நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண் கவிதாவின் பிரசவத்திற்காக மருத்துவ அதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுத்த  இன்பதுரை எம்எல்ஏவுக்கு கவிதாவும் அவரது குடும்பத்தினரும் தொழிலாளர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்


Previous Post Next Post