வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கபசுரக் குடிநீர்


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் வெலிங்டன் நீர்த்தேக்கப்பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலமுருகன் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தனர். பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்  பொதுமக்களுக்கு வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 

பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு  வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கீரனூர்  மருத்துவர் பிரவீனா சுகாதார செவிலியர் மீனா கிராம உதவியாளர் கார்த்திக் மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.