மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் 


 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அருண் மற்றும் ராஜேஷ் இருவரும்  திமுக இளைஞரணி மாநில தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

 

அந்த  கோரிக்கையை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நேரில் சென்று வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்த மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி ,ஆண்டிபட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் பொண்ணு துரை, பொறுப்புக் குழு உறுப்பினர் சுப்புராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.