பசியில்லா நத்தம் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பசியில்லா நத்தம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது இதில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் வருவாய் ஆய்வாளர் பார்த்திபன்,நத்தம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சடகோபி பசியில்லா நத்தம் ஒருங்கிணைப்பாளர்கள் மதுசூதனன்,ஜெய்ஹிந்த் கண்மணி, ஆரிஃப் இப்ராஹிம் மற்றும் தாய் டிரைவிங் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்