21 பேர் பலி...1,685 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மட்டும் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


12,471 பேருக்கு செய்த சோதனையில் இந்த நோய்த்தொற்று விவரம் உறுதியாகி உள்ளது.


மொத்தம் 34,914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதில் இன்றுவரை 16,279 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் 12,570 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


18,325 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். 


இன்று மட்டும் 21 பேர் இறந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 304 பேர் இறந்து போய் விட்டனர்.