மண்டலத்திற்குள் போக்குவரத்து முறை முழுவதுமாக ரத்து

 


மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முறை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களை சில  மண்டலமாக பிரித்து அந்த மண்டலத்திற்குள் இருக்கும் மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.ஆனால் தற்போது எல்லா மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட எல்லைகளை மூட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மக்களுக்கு உரையாற்றினார். அப்போது தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும் ‘‘மண்டலத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதி என்ற முறை நாளையில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல அனுமதி வாங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


Previous Post Next Post