குடியாத்தம் நகராட்சியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


குடியாத்தம் நகராட்சியில் தினமும் கொரோனா பாதிக்கப்படுபர்வகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 40 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதையடுத்து குடியாத்தம் நகராட்சி பகுதியில் வரும் 24-07-2020 தேதி முதல் 31-07-2020ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


இந்த ஊரடங்கில்  சிறு, குறு தொழிலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கலாம்.   ஹோட்டல்கள் வழக்கம் போல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.


பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால், தேநீர் கடைகள் திறக்க அனுமதியில்லை. என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.