உதவி கேட்ட குடும்பத்திற்கு வாழ்க்கை கொடுத்த பெண்மணி...

தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் வசிப்பவர் மாணிக்கவாசகர். இவர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்தப்படுக்கையாக உள்ளார். இவரின் சூழிநிலையை அறிந்த  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரகாளிபுரத்தை ராஜேஷ்வரி என்பவர் நண்பர்களின் உதவியுடன் அவருக்கு தனித்துவமான படுக்கையும், அவர்களின் கும்பத்துக்கு நிரந்தர வருமானம் கிடைக்க தையல் மிசினும் வழங்கியுள்ளார்.இதைப்பற்றி அவர் பேசுகையில் :-


முழு ஊரடங்கு சமயத்தில் நான் உதவி தேவைப்படும் நலிந்த குடும்பங்களுக்கு தேடி சென்று உதவிகள் செய்துவந்தேன். அந்த சமயத்தில் கோம்பை பகுதியில் இருந்து மாணிக்கவாசகர் என்பவர் என்னிடம் உதவி கேட்டிருந்தார். அவருக்கு தேவையான அரிசி மளிகை பொருட்டாகள் கொடுத்தேன். அப்போது என்னால் எழுந்து நடக்க முடியாது படுத்தப்படுக்கையாகவே இருக்க சிரமமாக உள்ளது. மெத்தை வாங்கி கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார்.சாதாரண மெத்தை போல் இல்லாமல் இவருக்கு வசதியாக ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டும். விசாரித்தபோது சுமார் 12,000 வரும் என்று சொன்னார்கள். நண்பர்களின் உதவியுடன் அதை செய்து கொடுத்தேன். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.  பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் வருமானத்திற்கு வேறு ஏதும் வழி இல்லாத சூழ்நிலையில் இருந்தனர்.


எனக்கு ஒரு யோசனை தோன்றியது இவருக்கு டைலரிங் கற்றுக்கொடுத்து தையல் மிசின் வாங்கி தந்தால் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்று. அதன்படி எனது நண்பர் ராஜ்குமார் என்பவரிடம் தெரிவித்தேன். அவர் இரண்டு மிஷின்கள் வாங்கி கொடுத்தார். மெத்தை வாங்கிய கடையில் இதை பற்றி தெரிவிக்கையில் அந்த கடைக்காரர் எங்களது மெத்தைகளுக்கான கவர்கள் வெளியில் தான் கொடுத்து தைக்கிறோம். இனிமேல் இவர்களே அதை தைத்து கொடுக்கட்டும் என்று தெரிவித்தார்.


எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இனி இவர்கள் யாரிடமும் உதவி கேட்க தேவை இருக்காது. இதில் என்னுடைய பங்கு ஒருபகுதி தான் இதற்காக உதவிய முகநூல் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.