ரூ 1 கோடி ரூபாய் விவசாய கடன்... கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சிவினோத் வழங்கினார்

மாவட்ட கழக செயலாளர் அவர்களுக்கு படுகர் கலாச்சார முறைப்படி ஊர் தலைவர்கள் பொதுமக்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

குன்னூர் ஒன்றிய ஜெகதளா பேரூராட்சி க்கு உட்பட்ட ஜெகதளா கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 1 கோடி ரூபாய் விவசாய கடன் மற்றும் சுய உதவி குழு கடன் 119 பயனாளிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  கப்பச்சிவினோத் வழங்கினார்.

 

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு முன்னிலையிலும் குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பேரட்டி ராஜூ உதகை ஒன்றிய செயலாளர் பெள்ளி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த் ஜெகதளா போளன் ஜெகதளா பேரூராட்சி செயலாளர் பரமசிவம்

NCMS தலைவர் ராம்வாத்தியார் அம்மா பேரவை செயலாளர் சக்கத்தா சுரேஸ் வங்கி மேலாளர்(MD) வசந்தா மேற்பார்வையாளர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் ஊர் தலைவர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

 

இறுதியில் கபசுர குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.