மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நான்கு டிராக்டர்கள்...  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குருமந்தூர் மேடு பழனிக் கவுண்டம்பாளையம் பிரிவில் நடந்த  விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு  மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.பத்து லட்சம் மதிப்பீட்டில் விவசாயத்திற்கு தேவையான நான்கு டிராக்டர்களை வழங்கினார். மேலும்  அயலூர் செம்மாண்டாம் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட  குடிநீர் வசதியை திறந்து வைத்தார்.

 


 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,பெண்கள் சுயமாக பணி புரிய வேளாண்மை துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு டிராக்டர்கள்  வாடகைக்கு வழங்கப்பட்டது.கீழ் பவானி பாசனத்தில் இரண்டு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் புதிய கல்விக்கொள்கைக்கு நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்க படும் என்று கூறினார்.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,ஆவின் தலைவர் காளியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர்,பாவேசு,ராஜேந்திரன்,அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஓம் பிரகாஷ்,மாவட்ட கவுன்சிலர் அனுராதா, கோட்டுப் புள்ளாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார்,அயலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கன்,துணை தலைவர் காந்திவேல் வேதநாயகி,ஊராட்சி கழக செயலாளர் கோபால்,முன்னாள் துணை தலைவர் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.