கொடுமுடி கிழக்கு  ஒன்றியத்தில் 100 போ் பாஜகவில் இணைந்தனா்


ஈரோடு பாரதிய ஜனதா கட்சி தெற்கு  மாவட்டம்  கொடுமுடி கிழக்கு  ஒன்றியம் கொடுமுடியில் மூத்த தலைவா் காந்திஜி, ஈரோடுமாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியம், பொது செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, ஒன்றிய தலைவா் கிளாம்பாடிசேகா் முன்னிலையில் சித்ராபாண்டின், சோமசுந்தரம் தலைமையில் 100 போ் பாஜகவில் இணைந்தனா். நிகழ்ச்சியில்  ஒன்றிய பொருளாளா் இரா.ரகுநாதன் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மாநில,மாவட்ட, ஒன்றிய அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.