அக்கரை கொடிவேரி ஊராட்சியில் ரூ.12.95 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய புதிய தார்சாலை... 83 பயனாளிகளுக்கு 80 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கறவை மாட்டு கடன்


கோபிச்செட்டிபாளையம் அடுத்த அக்கரை கொடிவேரி ஊராட்சியில் ரூ.12.95 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய புதிய தார்சாலை  மற்றும் அக்கரை கொடிவேரி  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 83 பயனாளிகளுக்கு 80 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கறவை மாட்டு கடன், கே.சி.சி பயிர் மற்றும் அடமான  கடன், ஆகியவற்றை தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.அருகில் கோட்டாசியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர்,ஆவின் தலைவர் காளியப்பன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி,துணை பதிவாளர் கோபி சரகம் கந்தராஜா,கூட்டுறவு பிரச்சார அலுவலர் ஜி.வெங்கட்டராமன்,கூட்டுறவு வங்கி செயலாளர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.மனோகரன்,டி. என்.பாளையம் யூனியன் கவுன்சிலர் கே.எம்.விஜயலக்ஷ்மி, ஆசிரியர் வேலுச்சாமி, அக்கரை கொடிவேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.