குறிஞ்சிப்பாடியில் 14வது தேசிய நெல் திருவிழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 14 வது தேசிய நெல் திருவிழா  நிகழ்ச்சிகுறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

 


 

கிரியேட் துரைசிங்கம் தலைமை தாங்கினார் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் கவிராயர் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி   என்எல்சி சமூக பொறுப்புணர்வு, விளையாட்டு மற்றும் கல்வித்துறை தலைமை பொது மேலாளர் மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில்  400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் மூலமாக 10 வகையான நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

 

மேலும் பத்துக்கும் மேற்பட்ட நெல் வகையான காட்டு பானம், மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, கருங்குருவை, வெள்ளையப்பொன்னி, கருப்புக் கவுனி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, சொர்ணமசூரி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 

 

மேலும் இந்த 4000 விசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டு இதுவரை 2100 விவசாயிகளுக்கு இலவசமாக 2 கிலோ வழங்கப்பட்டது.  

 

இதில் விவசாய செலவினத்தை குறைக்கவும், நுகர்வோர்களுக்கு நஞ்சிலா உணவு கிடைக்கவும் மாநில அரசு உடனடியாக இயற்கை வேளாண் கொள்கையை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் கோரிக்கை வைத்தனர்.  

 

இந்நிகழ்ச்சியில் என்எல்சி சமூக பொறுப்புணர்வு பொதுமேலாளர் ராமச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் முருகன், நபார்டு வங்கி மேலாளர் விஜய், இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சுவாமிநாதன் நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் மற்றும் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.