திட்டக்குடி அருகே 150 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பா.ம.க வில் இணைந்தனர்
திட்டக்குடி அருகே பா.ம. கட்சியில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

 


 

கடலூர் மாவட்டம்   திட்டக்குடி வட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில்  கிழக்கு ஒன்றிய செயலாளர் அலெக்ஸ் நெப்போலியன் தலைமையில் சிறுமுளை ஊராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் மாற்றுக் கட்சி தொண்டர்கள்  சிறுமுளை, பெருமுளை, குமாரை, நிதிநத்தம், சாத்தநத்தம், புதுக்குளம், நாவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைசேர்ந்த இளைஞர்கள் ஒன்றிய செயலாளரை நேரில் சந்தித்து மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி இவர்களின் கொள்கையை ஏற்று  எங்களை கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ளுமாறும் பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.