சேலத்தில் வரும் ஆகஸ்ட் 25 கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்   
சேலம் மாவட்டத்தில் 41வது கோட்டத்தின் சார்பாக வரும் ஆகஸ்ட் 25  -ல் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் கிச்சிப்பாளையம் பகுதி துணை செயலாளர் ஆசைத்தம்பி தத்தா ஜி முன்னிலை வகித்தனர்

 

கோட்ட செயலாளர் கோக் ரவி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் ஆகஸ்ட் 25 அன்று கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி 100 பேருக்கு கபசுரக் குடிநீர் பவுடர், நோய் எதிர்ப்பு சத்து மாத்திரை ஆர்சனிக் 30 சி  வழங்குவதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தக் கூட்டத்தில் கிச்சிப்பாளையம் பகுதி பிரதிநிதி நிஜாம் இளைஞரணி செயலாளர் ஷாருக்கான் 41 வது கோட்ட அவைத் தலைவர் அண்ணாமலை துணைச் செயலாளர்கள் பி. கோபாலகிருஷ்ணன். ஜி. சதீஷ்குமார்.  ஏ.செந்தில். ஏ. மல்லிகா பகுதி பிரதிநிதி பிரபு. ராமமூர்த்தி பவா. நேசமணி முதலியார். மகளிர் அணி செயலாளர் கே தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் கோட்ட பொருளாளர் கமலஹாசன் நன்றி உரையாற்றினார். 

Previous Post Next Post