பழனியில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நுழைவாயில் ஆர்ப்பாட்டம்

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நுழைவாயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. கொரோன தொடரும் நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

இதன் அடிப்படையில் உடனடியாக நீதிமன்றத்தை சிறந்து செயல்பட வேண்டும் பருவ காலம் என்பதால் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு நிதியாக 3 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்

 

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தலைமையாக பாலுச்சாமி முன்னிலையாக ராஜமாணிக்கம், பிச்சமுத்து,

காரல்மார்க்ஸ், பாரதி,அருண் குமாரசாமி,திருமூர்த்தி,அகிலன்,செல்வம், ரியாஸ்அகமது, மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.