சேலம் கடைவீதி ஸ்ரீ பெரிய அங்காளம்மன் திருக்கோவில் கடைசி ஆடி வெள்ளி சிறப்பு பூஜை 


சேலம் மாவட்டம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ பெரிய அங்காளம்மன் திருக்கோவில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முகத்திற்கு மஞ்சள் காப்பு போடப்பட்டு கையில் சூலாயுதத்துடன் புது பட்டாடை நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர்.இதுபோன்று உற்சவர் அம்மனையும் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் விழாவில் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.