ஆயக்குடி பேரூராட்சியில் கொய்யா சந்தையை இடமாற்றம் செய்ய கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம்


பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சியில் கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆயக்குடி கொய்யா சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில் சார் ஆட்சியர் அசோகன் தலைமையில் வட்டாட்சியர் பழனிசாமி, துணை கண்காணிப்பாளர் சிவா, முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் ஆயக்குடி கொய்யா சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வருவதால் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு வைத்தனர்.


மேலும் பொதுமக்களின் நலன் கருதி குறுகிய காலத்திற்கு ஆயக்குடி கொய்யா சந்தையை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள மரத்தடி இடத்துக்கு மாற்றம் செய்துள்ளனர்.மேலும் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் ஆயக்குடி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் கொய்யா மார்க்கெட் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..