கொளாநல்லி ஊராட்சியில் 50 பெண்களுக்கு இலவசமாக புடவைகள் மற்றும் இனிப்பு


ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் நஞ்சை கொளாநல்லியில் சசிக்கலாவின் பிறந்தநாளை முன்னிட்டு  ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.தங்கராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 50 பெண்களுக்கு இலவசமாக  புடவைகள் மற்றும் இனிப்புகள்  வழங்கினார்.


இந்நிகழ்ச்சிக்கு நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்றத் துணை தலைவர்               க.மு.நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய செயலாளர், கொடுமுடி ஒன்றிய பேரூர் செயலாளர்கள் மற்றும் கிராமஊராட்சி செயலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.