தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா




தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா மங்களூர் பிடிஒ துவக்கி வைத்தார்.


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில்  மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

 

ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைதலைவர்  செல்வி நீலகண்டன் முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து  தொடங்கிவைத்தார்.

 

இதில் பலன்தரும் மரங்களான நாவல், இலுப்பை,புளியமரம், தேக்கு உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் என்ஆர்சி பணியின் மூலம் நடப்பட்டது.

 

அதைதொடர்ந்து தூய்மை காவலர்களுக்கு முககவசம்,கையுரை,சாணிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபரகரணங்கள் வங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு,ஊராட்சி செயலர் தேவேந்திரன், வார்டு உறுப்பினர்கள் முத்தையா, செல்விமாணிக்கம்,மதியழகன் ஜோதிதனபால், செல்வமணிகாசிநாதன் மற்றும் தூய்மை  காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

 




Previous Post Next Post